search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்"

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல், ராசிபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    மோகனூர்:

    இந்திய மாணவர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்க மாவட்ட துணைச் செயலாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பிரபாகரன் கோரிக்கை குறித்து பேசினார்.

    மத்திய, மாநில அரசுகள், அரசு பள்ளிகளை பாதுகாத்திட வேண்டும். உடனடியாக அனைத்து மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்க வேண்டும். மூடப்பட்ட அரசு பள்ளிகளை திறக்க வேண்டும். அரசாணைப்படி அனைத்து அரசு பள்ளி, கல்லூரிகளில் அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகளை செய்ய வேண்டும். மாணவியர், பெண்கள் மீதான தாக்குதல்களை தடுக்க கமிட்டிகளை அமைத்து, முறையாக கல்வி வளாகங்களை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதே கோரிக்ககைளை வலியுறுத்தி ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் சரவணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். #tamilnews
    திருவள்ளூர் அருகே ஆசிரியர்களை மாற்றக்கோரி மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த தலக்காஞ்சேரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் உட்பட 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் 46 மாணவிகள் உட்பட 83 பேர் படித்து வருகிறார்கள்.

    இந்த பள்ளியில் சரியாக பாடம் எடுக்காத ஆசிரியர்களை மாற்றக்கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தியும் அதிகாரிகளிடம் மாணவர்களின் பெற்றோர் புகார் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த மாணவ-மாணவிகள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.

    இந்த பள்ளியில் ஆசிரியர்கள் பாடங்களை சரிவர நடத்துவதில்லை. ஆங்கில வழிக் கல்வியை இந்த பள்ளியில் கொண்டு வர வேண்டும். அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்து புதிய ஆசிரியர்களை நியமித்தால் மட்டுமே மாணவர்களின் கல்வித் தரம் உயரும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தகவல் அறிந்ததும் கல்வித்துறை அதிகாரி குமாரசாமி, வட்டாட்சியர் தமிழ்செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர்களின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
    திருத்துறைப்பூண்டி அருகே அடிப்படை வசதி செய்ய கோரி கல்லூரி மாணவிகள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே தண்டலைச்சேரி பாரதிதாசன் மாதிரிக் கல்லூரியில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

    இதில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றிய செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் கணேஷ், நகர செயலாளர் குமார், மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் வீரபாண்டியன் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் முருகேசு, மாவட்ட துணை செயலாளர் துரை அருள்ராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    ஆர்ப்பாட்டத்தில் கல்லூரிக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சுறுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை உடனடியாக நிறைவேற்றக்கோரியும் கல்லூரிக்கு தியாகி சீனிவாசராவ் பெயரை சூட்ட வேண்டுமென்பதை வலியுறுத்தியும் மாணவ, மாணவிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    ×